செய்திகள் :

குழந்தை இல்லாததால் மறுமணம் செய்த கணவன்; மருமகளை கொன்று, விபத்து நாடகமாடிய மாமனார்-மாமியார் கைது

post image

கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.

ரேணுகாவுக்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததால், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், சந்தோஷ்-க்கு அவருடைய பெற்றோர்களான கமண்ணாவும் - ஜெயஶ்ரீயும் வேறொருப்பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் கர்பமாகியிருக்கிறார்.

பெண் கொலை
பெண் கொலை

இந்த நிலையில், நேற்று காவல்நிலையத்துக்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய ஒருவர், ஒருப்பெண் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், இறந்தவரை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் காவல்துறை விசாரணையில், இறந்தவர் ரேணுகா தேவி என்பது தெரியவந்தது. அது தொடர்பாக விசாரித்தபோது, ரேணுகாவின் மாமனார் கமண்ணா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரி, ``சந்தோஷ்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்தப் பிறகு ரேணுகாவை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கோயிலுக்கு சென்ற ரேணுகாவை அழைத்துவர கமண்ணாவும், ஜெயஶ்ரீயும் சென்றிருக்கின்றனர்.

மூவரும் ஒரே பைக்கில் ஏறி வந்த போது மூன்றாவதாக அமர்ந்திருந்த ரேணுகாவை கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

காவல்துறை

அப்போது ரேணுகாவின் சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கின்றனர். இதை மறைக்க விபத்துப்போல மாமனாரும் மாமியாரும் சித்தரித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஜெயஶ்ரீயையும், கமண்ணாவையும், ரேணுகாவின் கணவர் சந்தோஷையும் கைது செய்திருக்கிறோம்.

சம்பவம் நடந்த அடுத்த 6 மணி நேரத்திற்குள் அது ஒரு கொலை என்று தெரியவந்தது. முழுமையான விசாரணைக்குப் பிறகு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்." எனத் தெரிவித்திருக்கிறார்.

கரூர்: ரூ. 12 லட்சம் செக் மோசடி வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி கைது... ஜாமீன்! - நடந்தது என்ன?

அ.தி.மு.க கரூர் மாவட்ட கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளராக சுரேகா கே பாலச்சந்தர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த 2012 - ம் ஆண்டு தனது குடும்பத் தேவைக்காக, தனது நெருங்கிய உறவினர் அசோக்கும... மேலும் பார்க்க

பிறழ் சாட்சியாக மாறிய காதல் தம்பதி; கடத்தல் வழக்கில் யுவராஜ் விடுதலை! - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்தவர் பாலாஜி. திருவாரூர் மாவட்டம், கொத்தங்குடியைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர்கள் இருவரும் கடந்த 2013-இல் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரின் வீட்டில் இவர்களின்... மேலும் பார்க்க

திருச்சி: ரூ.3 கோடி மதிப்புள்ள 3 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்; தொடரும் கடத்தல் சம்பவங்கள்

சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்படி, சோதனை செய்த பொழுது சந்தேகத்திற்கிடம... மேலும் பார்க்க

Doctor Death: சிறையிலிருந்து தப்பிய சீரியல் கில்லர் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கைது!

ராஜஸ்தானின் தௌசாவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், துறவியாக நடித்த சீரியல் கில்லர் தேவேந்திர சர்மா (67) கைது செய்யப்பட்டிருக்கிறார். மருத்துவரான இவர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா எனப் பல்வேறு மாநிலங்களில் 7 பேர... மேலும் பார்க்க

விவாகரத்தான, கணவனை இழந்த பெண்கள் டார்கெட் - 100 பெண்களிடம் திருமண ஆசை காட்டி பணமோசடி செய்த நபர்

மும்பை எல்.டி மார்க் பகுதியை சேர்ந்த 34 வயதாகும் பெண் ஆசிரியைக்கு மெட்ரிமோனியல் தளம் மூலம் கொரோனா காலத்தில் வினீத் மல்ஹோத்ரா என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து பேச... மேலும் பார்க்க

மூன்றரை வயது மகளை ஆற்றில் வீசிக் கொன்ற தாய்; விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்!

கேரள மாநிலம், எர்ணாகுளம் செங்கமநாடு திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவருக்கும் குறுமசேரி பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்றரை வயதில் கல்யாணி என்ற பெண் குழந்தை இருந்த... மேலும் பார்க்க