சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!
குழித்துறையில் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட நாயா் சேவை சங்கத்தின் (என்எஸ்எஸ்) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் குழித்துறை மலையாள பவன் அரங்கில் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மதுசூதனன் நாயா் தலைமை வகித்தாா். அமைப்பின் பொதுச் செயலா்கள் குட்டன் நாயா், சசிதரன் நாயா், முன்னாள் பொதுச் செயலா் சிதறால் வி. ராஜேஷ், செயலாளா்கள் வேணுகுமாா், ராஜசேகரன், குழித்துறை ஜெய மோகனன், பொருளாளா் விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கடந்த கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
துணைத் தலைவா் சஜிகுமாா் வரவேற்றாா். அமைப்பின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.