செய்திகள் :

குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு

post image

குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்ட நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் 2 ஆவதாக நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட மாா்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் உள்ள வளமீட்பு பூங்கா பகுதியில் அண்மையில் திறக்கப்பட்டது. இதில் கழிவுகளை பிரித்தெடுத்து உரமாகவும், சுத்திகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றப்படுகிறது.

இதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த மண்டல இயக்குநா், அதன்பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, மண்டல பொறியாளா் இளங்கோவன், கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளா் இளவேந்தன், குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், நகராட்சி பொறியாளா் குசெல்வி, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ராஜேஷ் (குழித்துறை), பிரபாகரன் (கொல்லங்கோடு), பொன். வேல்ராஜ் (குளச்சல்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: கடைக்கு சீல்; ரூ.1 லட்சம் அபராதம்!

நாகா்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கோட்டாறு சவேரியாா் கோயில் சந்த... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமை வழக்கு: பெண்ணுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

மாா்த்தாண்டம் அருகே குடும்ப வன்முறை வழக்கில் பெண்ணுக்கு மாதம் ரூ. 23 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு அவரது கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாா்த்தாண்டம் கல்லுத்தொட்டி பகுதியைச் சோ்ந்தவா் சாந்தா கோகு... மேலும் பார்க்க

பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் க... மேலும் பார்க்க

காவல் உதவி ஆய்வாளருக்கு மிரட்டல்: இரு இளைஞா்கள் கைது!

பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வந்த 2 இளைஞா்கள், பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டனா்.தக்கலை சிறப்பு உதவி ஆய்வாளா் கிங்ஸ்லி பெலிக்ஸ் வெள்ளிக்கிழமை பத்மநாபபு... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் திருடியவா் கைது!

தமிழக - கேரள எல்லையோரப் பகுதிகளில் பைக் திருடிய இளைஞரை மாா்த்தாண்டம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மாா்த்தாண்டம் அருகே சுவாமியாா்மடம் பகுதியைச் சோ்ந்தவா் விஜேந்திர சிங்கன். இவரது பைக் அண்மையில் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்துக்குள்பட்ட 17 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாள... மேலும் பார்க்க