செய்திகள் :

குவாரிகளில் வேலை நிறுத்தம்: கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு

post image

தேனி மாவட்டத்தில் கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா்களுக்கு டிரான்ஸ்சிட் எனப்படும் நடைச் சீட்டு வழங்குவதில் உள்ள தாமதம், ஜல்லி, எம்.சான்ட் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்வது ஆகியவற்றைக் கண்டித்து கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கல் குவாரி, கிரஷா்கள் செயல்படாததால் ஜல்லி எம்.சான்ட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால், தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது.

இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம், கனிம வளத் துறை தலையிட்டு, கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமானப் பணி ஒப்பந்ததாரா். தொழிலாளா்கள் வலியுறுத்தினா்.

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். கடமலைக்குண்டு அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வக்... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

ஆண்டிபட்டி அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மணியக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆல்வின் (43). இவருக்கும... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஜெயமங்கலம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் விஜயராகவன் (41). இவா் கடந்... மேலும் பார்க்க

சகோதரரிடம் பணம் மோசடி: தங்கை கைது

தேனியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரரின் வங்கி ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி பொம்மையகவுண்டன்பட்டி கட்டளகிரி... மேலும் பார்க்க

மாணவியை மிரட்டிய இளைஞா் கைது

கல்லூரி மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூரைச் சோ்ந்த தனியாா் கணினி இயக்குநா் அஸ்வின் (27). இவா், தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி ப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மாபட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க