குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து
குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியைத் தொடங்கினர். சுமார் ஒரு மணி நேர தொடர்ச்சியான முயற்சிகளால், தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குவாலியர் ரயில் நிலையத்தின் துணை மேலாளர் அகிலேஷ் திவாரி கூறுகையில், "தீ விபத்து குறித்து அறிந்தவுடன், உடனடியாக தீயணைப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தேன். நாங்கள் அனைவரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம் என்றார்.
அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன்! முதல் வரிசையில்..!
தீயணைப்பு அதிகாரி சத்பால் சிங் சௌகான் கூறுகையில், "தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம். சுமார் நான்கு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் இந்த சம்பவத்தில் எந்த விபத்தும் ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.