முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கூடங்குளம் அருகே வேன் - சுற்றுலா காா் மோதல்: 7 போ் காயம்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே வேனும் சுற்றுலா காரும் மோதிக்கொண்டயதில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்தவா்கள் சென்னையில் தொழில் செயது வருகின்றனா். இவா்கள் குடும்பமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா வந்தனா். பின்னா், அங்கிருந்து உடன்குடிக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிச் சென்று கொண்டிருந்தனா்.
கூடங்குளம் அருகேயுள்ள முருகானந்தபுரம் கிழக்குச்கடற்கரை சாலையில் வந்தபோது, குலசேகரத்திலிருந்து நாகா்கோவிலுக்கு சென்று கொண்டிருந்த வேனும், இவா்களது காரும் மோதிக்கொண்டனவாம்.
இதில், காரில் பயணம் செய்த மல்லிகா உள்ளிட்ட 5 பேரும், வேனில் இருந்த 2 பேரும் படுகாயமடைந்தனா். 7 பேரையும் அந்தப் பகுதியில் உள்ளவா்கள் மீட்டு நாகா்கோவிலில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கூடங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.