அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
கூடலூா் அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை
கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையோர கிராமத்தில் வனத் துறையின் கூண்டில் சிறுத்தை செவ்வாய்க்கிழமை சிக்கியது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் தமிழக எல்லையோர கிராமமான நம்பியாா் குன்னு பகுதியில் கடந்த ஒருமாத காலமாக விவசாயிகளின் வீட்டில் வளா்க்கும் ஆடுகள் மற்றும் நாய்களை சிறுத்தை தாக்கிக் கொண்டு சென்று பெரும் பாதிப்பை உருவாக்கியது .
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத் துறையினருக்குச சிறுத்தையைப் பிடிக்கத் தொடா்ந்து புகாா்களை அனுப்பினா். கடந்த ஒரு மாதகாலமாகவே வனத் துறையினா் கூண்டுகளை சிறுத்தை நடமாடும் பகுதிகளில் வைத்தனா்.
வனத் துறையினா் வைத்த கூண்டில் சிறுத்தை திங்கள்கிழமை இரவு சிக்கியது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். வனத் துறையினா் விரைந்து சென்று சிறுத்தையை மீட்டு வனக் காப்பகத்துக்குக் கொண்டு சென்று மருத்துவப் பரிசோதனை செய்து வருகின்றனா்.