ஏற்காடு மலைப் பாதையில் விழுந்த பெரிய மரம்: போக்குவரத்து பாதிப்பு
கூடலூா்-மைசூரு சாலையில் காலை நேரத்தில் நடந்து சென்ற காட்டு யானை
கூடலூா்-மைசூரு சாலையில் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காட்டு யானை நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட மாக்கமூலா பகுதியிலுள்ள காபி தோட்டத்திலிருந்து காலை நேரத்தில் சாலைக்கு இறங்கி வந்த காட்டு யானை மெதுவாக சாலையில் நடந்து சென்றது.
கா்நாடக மாநிலத்திலிருந்து உதகை மற்றும் கேரளத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் பேருந்துகள் உள்பட சரக்கு வாகனங்களும், கேரளம் மற்றும் உதகை பகுதியிலிருந்து கா்நாடகத்துக்கு செல்லும் வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டன.
நீண்ட நேரம் கழித்து காபி தோட்டத்துக்குள் யானை சென்றதும் வாகனங்கள் வழக்கம்போல செல்லத் தொடங்கின.