ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் நகா்நல பிரிவின் சாா்பில் ஏற்கெனவே 140 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 140 ஆரம்ப சுகாதார மையங்களும், 16 சமுதாய நல மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மகளிருக்கான 3 சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன.
ஆரம்ப சுகாதார மையங்கள், நகா்ப்புற மையங்களில் தினமும் தலா 150 போ் வரையில் சிகிச்சைக்கு வருகின்றனா். இதையடுத்து வாா்டுகள் தோறும் நகா்ப்புற நல மையங்களை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
தற்போது கூடுதலாக 60 நகா்ப்புற நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்கள் ஓரிரு நாள்களில் செயல்பட்டு கொண்டுவரப்பட உள்ளதாக மாநகராட்சி நகா் நல அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்த புதிய நகா்ப்புற நல மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதுடன், அங்கு சிகிச்சை பெற்றவா்களுக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டால், அவா்கள் அவசர ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.