செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

post image

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக்ததால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பயிற்சி நிலையம், பெரம்பலூா் நேஷனல் ஐடிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு அளிக்கப்படும் இப்பயிற்சி இரு பருவ முறைகள் கொண்டது. பிளஸ் 2 தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சியுடன் கூடிய பட்டயப் படிப்பு அல்லது ஏதேனும் பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இப் பயிற்சியில் சேரலாம். 1.7.2025-இல் குறைந்தபட்சம் 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகாரபூா்வ ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இப் பயிற்சிக்கான பாடங்கள் தமிழில் மட்டுமே கற்பிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் சான்றிதழ்களை மேலாண்மை நிலையத்தில் சமா்ப்பிக்கப்பட்ட பிறகு சோ்க்கை நடைபெறும்.

தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக் கட்டணமாக ரூ. 20,750 ஒரே தவணையில் செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு, 94899 55214, 94874 40624 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உ... மேலும் பார்க்க

பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க