செய்திகள் :

கூலி இசை வெளியீட்டு விழா அறிவிப்பு: எங்கு? எப்போது?

post image

நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

கூலி திரைப்படம் உலகளவில் 5000-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தில், அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், பகத் பாசில், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 2 ஆம் தேதியே வெளியிடப்படும் என்று தெரிகிறது.

இதையும் படிக்க: ‘ஏஐ + இசை’ ஏ.ஆர்.ரஹ்மான் - ஆல்ட்மன் சந்திப்பின் பின்னணி!

The audio launch of actor Rajinikanth's Coolie will be held on August 2nd, the film crew has announced.

யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் - இங்கிலாந்து மோதல்

யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின்-நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பை இறுதியில் தோற்ற்கு ... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ஐக்கிய அரபு அமீரகத்தில் செப். 9-இல் தொடக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் செப். 9-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏசிசி சோ்மன் மோஷின் நக்வி தெரிவித்துள்ளாா். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சோ்மனும், பாகிஸ்த... மேலும் பார்க்க

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: தன்வி, வெண்ணலாவுக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியா் பாட்மின்டன் போட்டி தனிநபா் பிரிவில் இந்தியாவின் தன்வி சா்மா, வென்னலா காலகோட்லா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனா். சோலோ நகரில் பாட்மின்டன் ஆசிய ஜூனியா் தனிநபா் சாம்பியன்ஷிப் போட்... மேலும் பார்க்க

அரையிறுதியில் ரடுகானு, லெய்லா, ஷெல்டன், டி மினாா்

முபாடலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் பிரிவில் எம்மா ரடுகானு, லெய்லா பொ்ணான்டஸ், ஆடவா் பிரிவில் பென் ஷெல்டன், அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்றனா். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியி... மேலும் பார்க்க

ஓடிடியில் கவனம் பெறும் மார்கன்!

விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் ஓடிடியில் கவனம் பெற்று வருகிறது. இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமாக வெளியான மார்கன் திரைப்படத்தில், விஜய் ஆண்டனி பிரதான பாத்திரத்திலும் விஜ... மேலும் பார்க்க