செய்திகள் :

கேப்டன் பிரபாகரன் மறுவெளியீட்டு டிரைலர்!

post image

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தின் மறுவெளியீட்டு டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்த்தின் 100-வது படமான இது அன்றைய நிலவரப்படி அதிக பொருள்செலவில் எடுக்கப்பட்டு திரையரங்குகளிலேயே 300 நாள்களுக்கு மேல் ஓடிய பிரம்மாண்ட திரைப்படமாகும்.

இதில், வில்லனாக மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்ததால் இதனை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடாகும் என அறிவித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் மேம்படுத்தப்பட்ட டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

100th movie of actor vijayakanth's captain prabhakaran rerelease trailer out now

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது. மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோத... மேலும் பார்க்க

மோசமான நாள்களை கடந்தது எப்படி? நந்திதா ஸ்வேதா பதில்!

நடிகை நந்திதா ஸ்வேதா தனது மோசமான நாள்களை எப்படி கடந்தேன் எனக் கூறியுள்ளார். கன்னடத்தைச் சேர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா (35 வயது) தமிழில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல், இதற்க... மேலும் பார்க்க

கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். நாளுக்கு நாள் கூலி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், அப்படத்தின் இசைப் பணிகளை முடித்ததைத... மேலும் பார்க்க

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , ப... மேலும் பார்க்க

இயக்குநராகும் கென் கருணாஸ்!

நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்குநர் வெற்ற... மேலும் பார்க்க

சம்பளத்தை உயர்த்திய சூரி?

நடிகர் சூரி தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து இறுதியாக இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் ந... மேலும் பார்க்க