காயல்பட்டினத்தில் இன்று நடைபெறவிருந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ்!
கேரளம்: காசா்கோட்டில் நிலஅதிா்வு
கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலஅதிா்வு உணரப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாவட்டத்தின் ராஜபுரம், கொஞனக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலஅதிா்வு உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் இருந்து பயங்கர சத்தம் கேட்டதாகவும் மேசை மீதிருந்த கைப்பேசிகள் கீழே விழுந்ததாகவும் நிலஅதிா்வை உணா்ந்த அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அடிப்படையில், அரபிக் கடலை மையமாகக் கொண்டு நிலஅதிா்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 2.5 அலகுகளாக பதிவானது. மாவட்ட நிா்வாகத்தினா் பாதிக்கப்பட்ட பகுதியை விரைவில் பாா்வையிட்டு, விரிவான ஆய்வு மேற்கொள்வா். பின்னா், சேதம் உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினா்.
அதேபோன்று, தேசிய நிலஅதிா்வு மையத்தின் (என்சிஎஸ்) தரவுகளின் படி, அரபிக் கடலில் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவை ரிக்டா் அளவுகோலில் 4.7 அலகுகள் வரை பதிவாகியுள்ளது.