செய்திகள் :

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

post image

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் காரணமாக தாமதமாக வந்ததால், இரவு 9 மணியளவில் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரின் மகன் வி.ஏ. அருண் குமார் தகன மேடைக்கு மரியாதை செலுத்தி பூத உடலுக்கு எரியூட்டினார்.

கேரள முன்னாள் முதல்வரும் மார்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை வழியாக உடல் கொண்டுசெல்லப்பட்டாலும், வழிநெடுக மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தி, அவரை வழியனுப்பிவைத்தனர். இதனால், 150 கிலோமீட்டரைக் கடக்க 22 மணிநேரங்கள் ஆனது.

அச்சுதானந்தனின் வீட்டில் அவரின் உடல் வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பலர் திண்டு நின்று தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். தொடர்ந்து இரவு 9.10 மணியளவில் புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்ட தகன மேடையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கேரள முதல்வர் பினராயில் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்தனர்.

இதையும் படிக்க | சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

Former Kerala Chief Minister V.S. Achuthanandan cremated

185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

குஜராத்தில் 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு, இந்தியக் குடியுரிமைக்கான சிறப்புச் சான்றிதழ்களை, அம்மாநில அரசு வழங்கியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த, 185 அகதிகளுக்கு, குஜர... மேலும் பார்க்க

இந்தியாவின் ஆக்கப்பூர்வமான சக்திகள் நீங்கள்தான்! தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினருக்கு ராகுல் புகழாரம்

இந்திய நாட்டின் ஆக்கப்பூர்வமான சக்திகளாக தலித், பழங்குடியினர், ஓபிசி பிரிவினர் விளங்குவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸின் இதர பி... மேலும் பார்க்க

தவறான விடியோக்கள்: 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 25 செயலிகள், இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.தடை செய்யப்பட்ட இணையதளம், செயலிகளை இந்தியாவில் மக்கள் பார்க்காத வகையில் தடை செய்யுமாறு இணையதள சே... மேலும் பார்க்க

தாய்லாந்து, கம்போடியா படைகள் மோதல்: இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்ததைத் தொடா்ந்து, எல்லைக்கு அருகிலுள்ள 7 மாகாணங்களில் இந்தியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தாய்லாந்தில் உள்ள இந்திய த... மேலும் பார்க்க

கேரளத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில், அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியிரு... மேலும் பார்க்க

ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!

ஆதி காலத்தில், பொருளுக்கு பொருள் என பண்டமாற்றத்துக்கு மாற்றாக வந்த பணம் பல காலமாகக் கோலோச்சி வந்த நிலையில் அதற்கு மாற்றாக மாறியிருக்கிறது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள். இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள... மேலும் பார்க்க