செய்திகள் :

கைகொடுத்த படிப்பு; ஆட்டோவில் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த காவலர் - திருப்பூரில் நெகிழ்ச்சி சம்பவம்!

post image

திருப்பூர், வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங்கு ரோடு ஏவிபி பள்ளி அருகே வெள்ளிக்கிழமை இரவு போலீஸார், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவில், பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, ஆட்டோ அருகில் சென்று பார்த்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண் பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதும், அதனால், வலியால் அவர் துடித்து வருவதும் தெரியவந்தது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்து உள்ளார். மருத்துவமனை செல்வதற்குள் அந்தப் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, தாய் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு பெண் காவலர் ஒருவர் பிரசவம் பார்த்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோகிலா

இதுகுறித்து காவலர் கோகிலா கூறுகையில், "சுதந்திர தினம் என்பதால் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். நள்ளிரவில் நாங்கள் சோதனை மேற்கொண்டு இருந்த பகுதிக்கு வந்த ஆட்டோவில் பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது வடமாநில பெண் என்பதும், அவர் பிரசவ வலியில் துடித்தும் தெரியவந்தது. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவிக்கான ஏற்பாடுகளையும் செய்வதாகவும் என்னை ஆட்டோவில் வருமாறும் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆட்டோவில் செல்லும்போதே அப்பெண்ணுக்கு பிரசவமானது. நான் ஏற்கெனவே செவிலியர் படிப்பு முடித்திருந்ததால், என்னால் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிந்தது. மருத்துவமனைக்கு வருவதற்குள்ளேயே அந்தப் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

பிரசவம்

பின்னர், மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம். நர்சிங் முடித்து இருந்தாலும் எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. அதனால், காவல் துறையில் இணைந்து பணியாற்றி வருகிறேன். இந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க நான் படித்த படிப்பு உதவியாக இருந்தது" என்றார்.

பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து தனது பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Human Story: ''நான் படிச்ச கல்வி என்னைக் கைவிடல; பொண்ணுங்க படிக்கணும்'' - ஓர் ஆசிரியையின் கதை!

பொண்ணுங்க படிக்கணும் படிக்கணும்னு சொல்றதுக்குப் பின்னாடி எவ்ளோ கனமான காரணமிருக்கு அப்படிங்கிறதுக்கு, நாமக்கல் மாவட்டம் தத்தாதிருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கவிக்குயில் வாழ்க்கையும் ஓர் உதாரணமாகிருக்கு. ... மேலும் பார்க்க

Human Story: ''அப்போ தேவையில்லாத வேலைன்னு சொன்னாங்க; இப்போ'' - மதுரையில் ஒரு மர நேசன்

பக்கத்துல இருக்கிற மனுஷங்களுக்கு ஒரு நல்லது செய்யுறதுக்கு நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கிற நம்ம மத்தியில, உயிர் வாழறதுக்காகப் போராடிக்கிட்டிருக்க மரங்களைக் காப்பாத்திக்கிட்டிருக்கார் மதுரையைச் சேர்ந்த மண... மேலும் பார்க்க

Kerala: 3.5 சவரன் தங்க செயினை தூக்கிக்கொண்டு பறந்த காகம்; தேடிச்சென்று மீட்ட பொதுமக்கள்!

கேரளவில் பெண்களின் தங்க நகைகளை தூக்கிக்கொண்டு பறக்கும் காகங்களின் தொல்லைகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள மதிலகம் பகுதியில் அங்கன்வாடியில் உதவியாளாராக வேலை ச... மேலும் பார்க்க

`ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும்' - அரசின் பார்வைக்கு எட்டுமா இந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் குரல்

மாலை நேரம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் வாயிலில் இரண்டு இனிமையான குரல்கள், சலசலக்கும் சாலையில் கவிமீட்டிக் கொண்டிருந்தன.அருகே சென்றபோது இரண்டு பார்வையற்றவர்களின் குரல் எதிரே எதிரொலித்தது. ... மேலும் பார்க்க

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்கும் மதுரை தம்பதி!

ஒரு காதல் என்ன செய்யும்…? டூயட் மட்டும் பாடி மகிழாது. அவ்வப்போது புரட்சியையும் நிகழ்த்தும். அப்படித்தான் மதுரை ஆனையூர் பகுதியில் சமூகம் மற்றும் பொருளாதாரீதியில் பின்தங்கியுள்ள பள்ளிக்கூட மாணவர்களைத் த... மேலும் பார்க்க

பழங்குடியினர் தினம்: ``காடுகளிலிருந்து வெளியேற்றபடும் பழங்குடிகள் வாழ்க்கை'' -ஆய்வறிக்கை சொல்வதென்ன?

பழங்குடி மக்கள் குறித்த போதுமான ஆய்வுகள் இன்னமும் செய்யபடவில்லை. அழிந்து வரும் நிலையில் பல பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. காடுகள் அழிப்பு, நகரமயமாதல் போன்ற காரணங்களால் காடுகளிலிருந்து வெளியேற்றபடும் ... மேலும் பார்க்க