செய்திகள் :

கைதான `பாகுபலி' வால்மிக் கராட் - பஞ்சாயத்துத் தலைவர் கொலை வழக்கில் அமைச்சருக்கு சிக்கலா?

post image

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மசாஜோக் என்ற கிராமத்தைச் சுற்றி காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காற்றாலை உரிமையாளர்களிடம் உள்ளூர் அரசியல்வாதிகள் மிரட்டி பணம் பறிப்பதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இக்கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் சந்தோஷ் தேஷ்முக். இவர் அக்கிராமத்தில் காற்றாலை அமைக்க உள்ளூர் மக்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனால் கிராம மக்கள் மத்தியில் சந்தோஷ் தேஷ்முக்கிற்கு நல்ல மதிப்பு இருந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பஞ்சாயத்துத் தலைவராகி இருக்கும் சந்தோஷ் தேஷ்முக் தனது பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். காற்றாலை நிறுவனத்தை மிரட்டி ரூ.2 கோடி பறிக்க அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் முயன்றதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாயத்துத் தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கடந்த மாதம் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை மகாராஷ்டிரா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வால்மிக் கராட்

இக்கொலையில் மகாராஷ்டிரா தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் நகராட்சித் தலைவர் வால்மிக் கராட்டிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தனஞ்சே முண்டேயை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இக்கொலைக்கு பிறகு வால்மிக் கராட் தலைமறைவாகிவிட்டார். இக்கொலையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதில் பஸ் எரிக்கப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அவாதா என்ற காற்றாலை நிறுவனம் இக்கிராமத்தில் காற்றாலைகளை அமைத்து வருகிறது. அந்நிறுவனத்தின் ஊழியரை ரமேஷ் குலே என்பவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் கடந்த மாதம் தொடக்கத்தில் கடத்திச்சென்று காற்றாலை செயல்படவேண்டுமானால் 2 கோடி ரூபாய் கொடுக்கவேண்டும் என்று மிரட்டி விட்டு அனுப்பி வைத்தனர். கடந்த 6ம் தேதி ரமேஷ் குலேயும் அவனது ஆட்களும் காற்றாலை அமைக்கப்படும் இடத்திற்கு வந்து வேலை செய்வதைத் தடுத்தனர்.

இது குறித்து சந்தோஷ் தேஷ்முக்கிற்கு தகவல் கிடைத்தது. உடனே சந்தோஷ் தேஷ்முக் கிராம மக்கள் சிலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவரும், ரமேஷ் குலே ஆட்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்களுடன் வந்த சுதர்சன் குலே பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக்கை அடித்ததாகத் தெரிகிறது. அதனை கிராம மக்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுதர்சன் குலே மறுநாள் விடுவிக்கப்பட்டுவிட்டார். கடந்த மாதம் 9ம் தேதி சந்தோஷ் தேஷ்முக் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மற்றொரு காரில் வந்த சுதர்சனும் அவனது அடியாட்களும் காரை மறித்து சந்தோஷை கடத்திச்சென்றனர். அவரைச் சித்ரவதை செய்து கொலை செய்தனர். இக்கொலையை அடுத்து மறுநாள் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

தனஞ்சே முண்டே

கொலை தொடர்பாக சுதர்சன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மிரட்டி பணம் பறித்தலில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தனஞ்சே முண்டேயிக்கு மிகவும் நெருக்கமான வால்மிக் கராட்டிற்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் மக்களால் பாகுபலி என்று கூறப்படும் வால்மிக் கராட் ஆட்கள்தான் சந்தோஷைக் கடத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. வால்மிக் கராட் பார்லி பகுதியில் காற்றாலை அமைத்து வரும் சிவாஜி என்பவரை சந்தித்து ரூ.2 கோடி கொடுக்கவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து சந்தோஷ் கொலை வழக்கில் வால்மிக் கராட் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வால்மிக் கராட் மீது 10க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவ்விவகாரத்தில் அமைச்சர் தனஞ்சே முண்டே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், பா.ஜ.கவும் கூறி வந்தன. தொடர்ந்து தலைமறைவாக இருந்த வால்மிக் கராட் நேற்று காரில் வந்து போலீஸில் சரணடைந்தார். இவ்விவகாரத்தில் தனஞ்சே முண்டேயின் சகோதரியான மற்றொரு அமைச்சர் பங்கஜா முண்டே கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். அதேசமயம் இவ்விகாரத்தில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். தனஞ்சே முண்டேயை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று அஜித்பவாருக்கு பா.ஜ.க நெருக்கடி கொடுத்து வருகிறது.

கோவை: கரூர் கம்பெனி Vs டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் - வெடிக்கும் பஞ்சாயத்து

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023ம் ஆண்டு சிறைக்கு செல்வதற்கு முன்பு டாஸ்மாக் துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பார் உரிமையாளர்களிடம் கறார் வசூல், டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங... மேலும் பார்க்க

ISKCON: ஆரம்பத்தில் சின்ன சின்னதாய்; இப்போது லட்சக்கணக்கில் - கோயில் பணத்துடன் ஓட்டம் பிடித்த ஊழியர்

ஆக்ராவில் லட்சக்கணக்கில் கோயில் பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி உள்ளார் இஸ்கான் ஊழியர் ஒருவர். ஆக்ரா பிருந்தாவனத்தில் உள்ள இஸ்கான் அமைப்பில் 2019-ம் ஆண்டு சேர்ந்துள்ளார் முரளிதர் தாஸ் என்பவர். இந்த சம... மேலும் பார்க்க

`மனைவிக்கு பாடம் கற்பிக்கிறேன்' - பெற்றோர் வீட்டுக்குச் சென்று திரும்பி வராததால் கணவர் விபரீத முடிவு

குஜராத்தில், மனைவிக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று கணவன் தூக்குபோட்டுத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அவர் செல்போன் வீடியோ மூலம் தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. போலீஸாரின் கூற்றுப்படி, பொடாட் ... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ம... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் பழக்கம்; 500 பெண்களிடம் பணம் பறித்த 23 வயது இளைஞர்... பகீர் பின்னணி!

Delhi: டெல்லியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துஷார் பிஷ்ட், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துஷார் பிஷ்ட், பிரேசில... மேலும் பார்க்க

Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடல் சுரேஷ் சந்தி... மேலும் பார்க்க