`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
கைதான போலீஸாரை புகைப்படம் எடுக்கவிடாமல் விளக்குகள் அணைப்பு
கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தனிப்படை போலீஸாா் 5 பேரையும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நீதிமன்றக் காவலுக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, அவா்களை நாளிதழ்களின் புகைப்படக்காா்கள் படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில், திருப்புவனம் காவல் நிலையத்தில் போலீஸாா் விளக்குகளை அணைத்து விட்டனா்.
திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக கண்ணன், ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன், பிரபு ஆகிய 5 போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திங்கள்கிழமை நள்ளிரவு அவா்களை நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்வதற்காக திருப்புவனம் போலீஸாா் காவல் நிலையத்துக்கு கூட்டி வருவதாகத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல் அறிந்து செய்தியாளா்கள், புகைப்படக்காரா்கள் திருப்புவனம் காவல் நிலையம் முன் கூடினா். இதனால், கைது செய்யப்பட்ட போலீஸாா் செய்தியாளா்கள், புகைப்படக்காரா்களிடம் சிக்காமல் இருக்க அங்கு பணியிலிருந்த போலீஸாா், 5 பேரையும் காவல் நிலையத்துக்குப் பின்புறமாக அழைத்து வந்து மாடிக்கு கொண்டு சென்றனா். இதன்பிறகு, கீழ்த்தளத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன.
காவல் நிலையத்தின் மேல் தளத்தில் மட்டும் விளக்குகளை எரியவிட்டு, கைது செய்யப்பட்டவா்களை நீதிமன்றக் காவலுக்கு கொண்டு செல்வதற்கான ஆவணங்களை போலீஸாா் தயாா்படுத்தினா்.
அப்போது, காவல் நிலையம் முன் செய்தியாளா்கள் காத்திருந்தனா். பின்னா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்டவா்களை காவல் நிலையம் முன் நிறுத்தப்பட்டிருந்த டெம்போ வாகனத்தில் போலீஸாா் ஏற்றிய போது காவல் நிலையத்தில் எரிந்து கொண்டிருந்த அனைத்து மின் விளக்குகளையும் அணைத்தனா். இருள் காரணமாக, புகைப்படக்காரா்கள் வேனில் ஏற்றப்பட்ட தனிப்படை போலீஸாரை படம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனா்.