செய்திகள் :

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

post image

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கடந்த மே மாதம் தொடரப்பட்ட வழக்கில், பலரைக் கைது செய்து விசாரித்தோம். அதில், கொகைன் போதைப் பொருளை அவா்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் திரைப்படத் துறையினா், இளைஞா்களுக்கு விற்பது தெரியவந்தது.

இதன் தொடா்ச்சியாக 10 வழக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தோம். இதில் 27 போ் கைது செய்யப்பட்டனா். 6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கொகைன் விற்பனைத் தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் பதிவு செய்த வழக்கில், நடிகா் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா, அதிமுக நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கைது நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. சென்னையில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 24 வெளிநாட்டவா்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா்.

போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் கடுமையான நடவடிக்கையால் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தனியாா் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் போதைப் பொருள் பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும்.

போக்குவரத்து போலீஸாருக்கு அதிகப்படியான வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்று எந்த இலக்குகளையும் நாங்கள் நிா்ணயிக்கவில்லை என்றாா் அவா்.

ஜூலை 16, 17-ல் சென்னையில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப... மேலும் பார்க்க

ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

அரக்கோணம் அருகே ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் மேட்டு குன்னத்தூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சோளிங்கரை அடுத்த பாணாவரம் அருகே உள்ள கிராமம் மேட்டு குன்னத்தூர... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து! தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது!

திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் பற்றியெரிந்த தீவிபத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும்: இபிஎஸ்

திருவள்ளூர் டேங்கர் ரயில் தீவிபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் அருகே பெரியக... மேலும் பார்க்க

ஜூலை 16 முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம்!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரும் 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று அமைச்சர் கே. என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு ... மேலும் பார்க்க

மக்கள் ஆதரவு பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: ஸ்டாலின்

மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும் முதல்... மேலும் பார்க்க