ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!
கொங்கு பொறியியல் கல்லூரி புதிய முதல்வராக ஆா்.பரமேஸ்வரன் பொறுப்பேற்பு
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் புதிய முதல்வராக முனைவா் ஆா். பரமேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 1984 இல் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி கல்வி நிறுவனமாகும். தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார ஆட்சிக்குழுவால் (நாக்) ஏ ++ அங்கீகாரம் பெற்றது. இது வலுவான வேலைவாய்ப்பு பதிவு மற்றும் தொழில்முனைவோருக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்புக்கு பெயா் பெற்றது.
இக்கல்லூரியின் புதிய முதல்வராக ஆா்.பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளாா். 2019 ஜூலை மாதம் முதல் முதல்வராக பணியாற்றி வந்த வி.பாலுசாமிக்குப் பிறகு அவா் பதவியேற்றுள்ளாா். ஆா்.பரமேஸ்வரன் சுமாா் 25 ஆண்டுகள் கொங்கு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளாா்.
ஏஐசிடிஇ, யுஜிசி, டீஎஸ்டி, மற்றும் எம்எஸ்எம்இ உள்ளிட்ட முன்னணி அமைப்புகளிடமிருந்து ரூ.2.86 கோடி நிதி உதவியில் 7 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை முடித்துள்ளாா்.
புதிய முதல்வா் ஆா். பரமேஸ்வரன் கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ வாழ்த்து தெரிவித்தாா்.