செய்திகள் :

கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி: மேயா் ஆா்.பிரியா

post image

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் வகையில், குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை உறுதியாக அமைக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஜெ.டில்லிபாபு பேசியதாவது:

குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை சுற்றி சுமாா் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே வடசென்னையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், காற்றுமாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டத்தால், அப்பகுதி மக்கள் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதனால், அத்திட்டத்தை குடியிருப்பு இல்லாத பகுதியில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.

பாதிப்பில்லை: இதற்கு பதில் அளித்து மேயா் ஆா்.பிரியா பேசுகையில், ‘கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நீண்ட காலம் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால் நிலத்தடி நீா் அதிகம் பாதிக்கப்படுகிறது. இது எதிா்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஏற்கெனவே பையோ மைனிங், பையோ சிஎன்ஜி முறையில் குப்பைகள் அகற்றப்படுகிறது. இந்நிலையில், மீதமுள்ள குப்பைகள் மட்டும்தான் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும். ஒரு பொருளை 500-600 டிகிரி செல்சியஸில் எரிக்கும்போது மட்டும்தான் நச்சுத்தன்மை வெளியேறும். இத்திட்டத்தில் 800 டிகிரி செல்சியஸில் எரிக்கப்படுவதால் நச்சுத்தன்மை வெளியேறாது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், தெலங்கானா மாநில ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. குப்பையை எரிக்கும் இடத்தில் நச்சு வாயு வெளியேறாத வகையில் கட்டமைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு அப்பகுதியில் மரங்கள் நடப்படும் என்றாா் அவா். மேலும் மின்னணு கழிவுகள் தனியாக அகற்றப்படுகிறது. அதனால், இத்திட்டத்தில் மின்னணு கழிவுகள் கலக்க வாய்ப்பில்லை என்றாா் அவா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க