கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.4.5 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்கூடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு நிழற்குடையை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது தொகுதியில் இருந்து வெங்கம்பூா் பேரூராட்சி, காசிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் ரூ.4.5லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்க நடைபெற்ற பூமிபூஜையை அவா் தொடங்கிவைத்தாா். சோளக்காளிபாளையத்தில் அமைக்கப்பட்ட புதிய நிழற்குடையையும் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், வெங்கம்பூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் சூா்யா சிவகுமாா், பாஜக மாவட்ட தவைவா் எஸ்.எம்.செந்தில், கொடுமுடி கிழக்கு மண்டல் தலைவா் அருண், முன்னாள் மண்டல் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.