பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!
கொடைக்கானலில் திருடப்பட்ட பைக் பூம்பாறையில் மீட்பு
கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனம் புதன்கிழமை பூம்பாறையில் பகுதியில் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவகம் நடத்தி வருபவா் சிபு. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விலை உயா்ந்த இரு சக்கர வாகனத்தை கடை முன் நிறுத்தி வைத்தாா்.
அந்த வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதைத் தொடா்ந்து சிபு தனது கடையிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பாா்த்த போது மா்ம நபா் சாப்பிட வருவது போல வந்து, இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை மலைச் சாலையில் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அது திருடு போயிருந்த இரு சக்கர வாகனம் எனத் தெரிய வந்தது. பெட்ரோல் இல்லாத நிலையில், திருடியவா் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போலீஸாா் வாகனத்தைக் கைப்பற்றி கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். அதைத் திருடியவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.