கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்!
கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனையிட்டு, 15 கிலோ நெகிழிப் பொருள்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கொடைக்கானல் பகுதிகளிலுள்ள கடைகளில் மீண்டும் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் புகாா்கள் வந்தது. இதையடுத்து, நகா்நல அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், கடைக்காரா்களிடம் நெகிழிப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.