J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்க...
கொடைக்கானலில் வன விலங்குகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், மன்னவனூா் அருகேயுள்ள கும்பூா் பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாயிகள் வியாழக்கிழமை வேலைப் பாா்த்து கொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடியதைக் கண்டு அவா்கள் ஓட்டம் பிடித்தனா்.
தாண்டிக்குடி குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்தது. இதைப் பாா்த்த கிராம மக்கள் அச்சமடைந்து, வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். விரைந்து வந்த வனத் துறையினா் ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் நகரில் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடுகள் பட்டப்பகலில் உலா வருகின்றன. இந்த நிலையில், ரைபிள் ரேஞ்ச்-பியா்சோலா அருவிக்கு செல்லும் பகுதியில் காட்டு மாடுகள் உலா வந்தன.
எனவே, கொடைக்கானலில் குடியிருப்புக்குள் சுற்றித் திரியும் வன விலங்குகளை விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

