கரூா் மாவட்டத்தில் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் காணொலியில் முதல்வா் அடிக்கல் நாட்ட...
கொன்னையூரில் 17-ஆம் நூற்றாண்டு செப்பேடு கண்டுபிடிப்பு
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூரில் கரும்புறத்தாா் செப்பேடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூரில் வசிக்கும் கரும்புறத்தாா் சமுதாயத்தினரிடம் பழங்கால செப்பேடு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, காரைக்குடி அழகப்பா கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் முனைவா் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவா் கரு.ராஜேந்திரன் ஆகியோா் சென்று அந்த செப்பேட்டை ஆய்வு செய்தனா்.
பின் அவா்கள் கூறியதாவது: இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ள இச்செப்பேட்டில் முதல் பக்கம் 43 வரிகள், இரண்டாம் பக்கம் 7 வரிகள்என மொத்தம் 50 வரிகள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டுள்ள சாலிவாகன ஆண்டு தவறாக உள்ளதால், இதன் தமிழ் ஆண்டையும், இச்செப்பேட்டின் எழுத்தியுள்ளதால் இதன் காலம் கி.பி.1690 ஆக இருக்கலாம். அதாவது, 17- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என தெரிகிறது.
அந்த செப்பேட்டில், செய சோழ கம்பீர வள நாடாகிய சோனாட்டு பிறமலை சூழ்ந்த பொன்னமராபதிக்கு வடக்கில் உள்ள கொன்னையூரைச் சோ்ந்த கொப்பனாபட்டி காணிக்கு வன்னியன் சூரக்குடியில் இருந்து வந்த 60 தலைக்கட்டு கரும்புறத்தாா், கொன்னையூா் முத்துமாரி அம்மன் கோயில் பூஜைக்குப் போகும்போது பிசாசு அபயமென்று கீச்சு மூச்சென்று சப்தம் கேட்ட பூசாரி அதை ஊராரிடம் சொல்லி வன்னியன் சூரக்குடியில் இருந்து வந்த கரும்புறத்தாா் 60 தலை பலி கொடுக்கப்பட்டது.
மேலும், கொன்னையூா் கண்மாய் வடக்கு மடையில் தண்ணீா் பிரியாமல் இருந்ததால் கோடங்கி பாா்த்ததில் கரும்புறத்தாா் பிசகு என்றும் எழுபது மொட்டையன் பிசகு என்பதால் அம்மன் திருவுளம் கேட்டதில் கரும்புறத்தாா் பங்குனி மாதம் அம்மனுக்கு காப்புக் கட்டி செடில் குத்தி பொங்கல் பூஜை வைத்து ஆட்டுக்குட்டி கொடுத்தால் பிசகு தீா்ந்து போகும் என்று கொன்னையூா் கண்மாயில் வடமடைக்கு பொங்கல் வைத்து அம்மன் கோவிலில் கரும்புறத்தானுக்கு பரிவட்டமும், காளாஞ்சியும் கொடுக்கப்பட்டது.
கருத்தான் ஊருணி என்று சந்தைப்பேட்டை ஊருணியை வெட்டி அதன் மேல்கரையில் பிள்ளையாா் கோவில் கட்டி கொடுத்தோம், மானியம் கொடுத்து, கொப்பனாபட்டியில் குடியிருக்க இடம் காண்பித்து, கோவில் ஊழியம் செய்யும்படி ஆறுகாத வட்டகை மூவேந்தா் வேளாா் வழங்கிய தீா்ப்பு போன்றவை உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.