கொலை முயற்சி வழக்கில் மூவா் மீது குண்டா் சட்டம்
புதுக்கோட்டையில் பெண்ணைக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டம் பாய்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரதி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி தவமணியை (52) ஜூலை 15 ஆம் தேதி கொல்ல முயன்ாக நரிமேடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த அய்யப்பன் மகன் பூபதி (30), செல்வம் மகன் மணி (27), செல்வம் மகன் காா்த்திகேயன் (21) ஆகியோா் திருக்கோகா்ணம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் இவா்கள் மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தன்பேரில், மூவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.