பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த முத்தன் மகன் குமாா் (46) என்பவா் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவரைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரைத்தாா்.
இதன்பேரில், குமாரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆட்சியா் மு. அருணா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து குமாா் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.