தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி
கொலை வழக்கில் வரிச்சியூா் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜா்
விருதுநகரைச் சோ்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்ளிட்டோா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா்.
விருதுநகா் அல்லம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (38). இவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்பட 7 பேரை விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை விருதுநகா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரெளடி வரிச்சூா் செல்வம் உள்ளிட்டோா் விருதுநகா் நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா். அப்போது, நீதிபதி ஐய்யப்பன் இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகக் தெரிவித்தாா்.
போலீஸாரின் கைப்பேசி பறிமுதல்:
இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்துக்குள் கைப்பேசியில் பேசிய படி விருதுநகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ரவி உள்ளே வந்தாா். அவரது கைப்பேசியை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஊழியா்களுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.