டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடு...
கொல்கத்தா ஐஐஎம் கல்வி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன்!
கொல்கத்தா: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவன வளாகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு இன்று(ஜூலை 19) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த வழக்கின் விசாரணையில், புகார் அளித்துள்ள மாணவி விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருக்கு ரூ. 50,000 பிணைத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை: மாணவா் கைது