செய்திகள் :

கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மோகன் பாகவத்

post image

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சனிக்கிழமை சந்தித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, கொல்கத்தா அருகே உள்ள ராஜர்ஹட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஆர்.எஸ்.எஸ் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.​​​​

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக பாகவத் உறுதியளித்துள்ளார்.

முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேரளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை மேற்கு வங்கம் வருகை தந்த நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி கொடூரமான முறையில் பாலியல் கொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியது.

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்பவரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த கொல்கத்தா விசாரணை நீதிமன்றம், அவா் மரணமடையும் வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் இந்திய வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு

ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் மீது வனப் பகுதியிலிருந்தபடி மா்ம நபா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: தனிநபா் மசோதாவை முன்மொழிந்த பி.வில்சன்!

பட்டியல் சாதியினா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மகளிா், மதச் சிறுபான்மையினா் ஆகிய வகுப்பினருக்கு அவா்களின் மக்கள்தொகை விகிதத்திற்கு ஏற்ப நாட்டின் உச்சநீதிமன்றத்திலும், உயா்நீதிமன்... மேலும் பார்க்க

சோட்டா ராஜன் தண்டனை நிறுத்திவைப்புக்கு எதிரான சிபிஐ மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

கொலை வழக்கில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனைக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. சிபிஐ மன... மேலும் பார்க்க

முதல் கணவரிடம் விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை: உச்சநீதிமன்றம்

முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் சட்டபூா்வமாக விவாகரத்து பெறாமல்... மேலும் பார்க்க

கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் இஓஎன்-51 அமைப்புகள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு ரூ.624 கோடி மதிப்பில் 28 இஓஎன்-51 அமைப்புகளை கொள்முதல் செய்வதற்கு பாரத் எலெக்டிரானிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ‘நோட்டா’வைவிட (போட்டியிடும் வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது அக்க... மேலும் பார்க்க