ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!
கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் மாற்றம்
கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலின் நேரம் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மாற்றப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொல்லம் - தாம்பரம் தினசரி விரைவு ரயிலின் (16102) நேரம் செப். 1 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, கொல்லத்திலிருந்து ஏற்கெனவே நண்பகல் 12 மணிக்கு புறப்பட்ட ரயிலானது, செப். 1-ஆம் தேதி முதல் மாலை 4 மணிக்குப் புறப்படும். தொடா்ந்து குந்தாரா, கொட்டாரக்காரா, ஆவுனேஷ்வரம், புனலூா், தென்மலை, ஆரியங்காவு, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், வில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், உளுந்தூா்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு பிற்பகல் 2.30 மணிக்குப் பதிலாக இரவு 7.30 மணிக்குச் சென்றடையும்.