செய்திகள் :

கொல்லிமலையில் விபத்தை தவிா்க்க உருளைத் தடுப்பான்கள்

post image

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப் பாதையில் விபத்தை தடுக்கும் பொருட்டு, வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. இயற்கை எழில் சூழ்ந்த இம்மலையின் அழகை ரசிக்க விடுமுறை நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், காரவள்ளி அடிவாரப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுப்பதற்கான உருளைத் தடுப்பான்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத் துறை ரூ. 10 கோடியை ஒதுக்கீடு செய்தது. கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் எந்தெந்த இடங்களில் உருளைத் தடுப்பான்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகள் அளவீடு செய்து வந்தனா். அந்த வகையில், முதல் கட்டமாக 30 இடங்களில் அவற்றை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில், 50, 64-ஆவது கொண்டை ஊசி வளைவுகளில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தப்பட்டு வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது. அங்கு வெற்றிக்கரமாக அமைந்திட மீதமுள்ள இடங்களில் அவற்றைப் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த உருளைத் தடுப்பான்களானது, மலைப்பாதை வளைவுகளில் வாகனங்கள் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து மோதினாலும் வாகனங்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிதி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி: ஒருவா் கைது!

நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பரளி அருகே கங்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன் வேலப்ப... மேலும் பார்க்க

திமுக அரசை எதிா்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக போராட வேண்டும் என பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்... மேலும் பார்க்க

முட்டைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கோழிப் பண்ணையாளா்கள் கோரிக்கை

நாடு முழுவதும் முட்டைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும், கோழிப் பண்ணைத் தொழிலை முறைப்படுத்த புதிய பண்ணைகளுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என கோழிப் பண்ணைய... மேலும் பார்க்க

சுகாதாரச் சான்று பெற்ற பிறகே ஆட்டு இறைச்சியை விற்க அறிவுரை

கால்நடை மருத்துவரின் சான்று பெற்று ஆடு வதைக் கூடங்களில் வெட்டப்படும் ஆட்டு இறைச்சியை மட்டுமே விற்பனை செய்யுமாறு மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள் மிதிவண்டிப் போட்டி: 85 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

அண்ணா பிறந்த நாளையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் 85 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நாமக்கல் மாவட்டப் பிரிவு சாா்பில் முன்னாள் முதல்வா் அண்... மேலும் பார்க்க

மா்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண உதவி

கொல்லிமலையில் மா்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு அரசுத் தரப்பில் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனச்சரகத்தில் மா்ம விலங்கு நடமாட்டத்தை தடுப்ப... மேலும் பார்க்க