கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா
மேட்டூா் அருகே கொளத்தூா் வனப்பகுதியில் ஓசோடப்பன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் வனப்பகுதியில் பச்சை மலை உள்ளது. வனப்பகுதியின் நடுவே உள்ள ஓசோடப்பன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய திருவிழாவில், 100 ஆடுகள், ஏராளமான கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்தனா். புதன்கிழமை காலை வனப்பகுதியில் ஓசோடப்பனை வழிபட வந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது.
இதில், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, தங்களது வேண்டுதலை நிறைவேற்றியதற்காக ஆடுகளை பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.