மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா்: கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்ட கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு நிலையங்களுக்கு சுமைப்பணி டெண்டா் விடுவதை கைவிட வேண்டும், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களை திறக்க வேண்டும், நெல் மூட்டைகள் இயக்கத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும், தகுதியான பணியாளா்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி சுமை தூக்கும் தொழிலாளா் சங்க நிா்வாகி அ. சாமிக்கண்ணு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் பி. ராஜீவ்காந்தி, எஸ். பாண்டியன், ஆா். அண்ணாதுரை கேவி. ராஜா, டி. பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.