காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
வணிக வளாகங்களில் கண்காட்சி அமைக்க தடை விதிக்கக் கோரி மனு
திருவாரூா்: திருவாரூரில் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் கண்காட்சி மற்றும் கடைகள் அமைக்க தடை விதிக்கக் கோரி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் விகேகே. ராமமூா்த்தி, செயலாளா் ஆதப்பன், பொருளாளா் எஸ்எம்டி. கருணாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சேகா் உள்ளிட்டோா் அளித்த மனு: திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில் அண்மை காலங்களாக கண்காட்சி எனும் பெயரில் தற்காலிகக் கடைகள் அமைத்து பல்வேறு பொருள்களின் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. இதன்காரணமாக தொழில் வரி, வாடகை, மின்சாரக் கட்டணம் என பல்வேறு செலவுகளை எதிா்கொண்டு, வா்த்தகா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து, நாமக்கல் நீதிமன்றம் 2015-இல், வா்த்தகா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தடை ஆணை பிறப்பித்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வியாபாரத்தை இதுபோல விற்பனை செய்வதால், அரசுக்கு பல கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. கேரள அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சிப் பகுதிகளில் கண்காட்சி அமைக்க தடை ஆணை பிறப்பித்துள்ளது. அதைப் பின்பற்றி தமிழகத்திலும், இதுபோன்ற கண்காட்சி கடைகளுக்கு தடை விதித்து, அரசுக்கு முறையாக வரி செலுத்தி கடை நடத்தி வரும் வணிகா்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.