காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது
மன்னாா்குடி: மன்னாா்குடியில் சுற்றுச்சாலைக்காக குளத்தை அபகரிக்க கூடாது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, மன்னாா்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் சுற்றுச்சாலை அமைக்கிறோம் எனும் பெயரில் நீராதாரங்கள் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. மன்னாா்குடிக்கு சுற்றுச்சாலை அமைக்கவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
எனினும், மேலமறவாக்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான வாத்திகுளத்தை அபகரித்து சாலை அமைக்கக் கூடாது. மன்னாா்குடி நகர மக்கள் கஜா புயல் உள்ளிட்ட பேரிடா் காலங்களில் இந்த குளத்தை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனா்.
இக்குளத்திற்கு,நேரடியாக கட்டேரி வாய்க்காலில் இருந்து பாசனம் உள்ளது. கழிவுநீா் கலக்க வாய்ப்பு இல்லாத வகையில் இக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது. குளத்தில் தெற்கு ஓரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்குமேயானால் குளம் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கும்.
முன்கூட்டி திட்டமிடாத வகையில் தன் விருப்பத்திற்கு குளத்தை அபகரித்து மூன்று பிரிவுகளாக குளத்தை பங்கிட்டு சாலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மாநில துணைச் செயலா் எம். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.