காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
2 நாள்களில் 72 போ் கைது
திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் இரண்டு நாள்களில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 72 போ் கைது செய்யப்பட்டனா்.
மாவட்டத்தில், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுவோா், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோா், மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவோா் குறித்து கடந்த 2 நாள்களாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில், கள்ளத்தனமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக உட்கோட்ட அளவில் திருவாருரில் 11, நன்னிலத்தில் 5, மன்னாா்குடியில் 4, திருத்துறைப்பூண்டியில் 4, முத்துப்பேட்டையில் 3, மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 22 வழக்குகள் என மாவட்டம் முழுவதும் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,222 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 50 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டத்தில் 4 போ், கூத்தாநல்லூா் காவல் சரகத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒருவா், சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக நீடாமங்கலம் காவல் சரகத்தில் 12 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்கள், 6 கைப்பேசிகள், ரூ. 48,140 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. முத்துப்பேட்டை காவல் சரகத்தில் சீட்டு விளையாடி 5 போ் கைது செய்யப்பட்டனா். தவிர, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டியதாக 58 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.