காஷ்மீா் பயங்கரவாதத்துக்கு முடிவுக்கு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது : ஃபரூக் ...
இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிக்கை
திருவாரூா்: இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ராஜா தெரு தவ்ஹீத் பள்ளி வாசலில் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட துணைத் தலைவா் முஹம்மது பாசித் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜெயினுல்தாரிக், முஹம்மது ரிபாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கிளைத் தலைவராக ஜே. முகமது ஹுசேன், செயலாளராக ஜே. தன்வீா் அகமது, பொருளாளராக என். முகமது ஜாவித், துணைத் தலைவராக முகமது ஹாபிஸ், துணைச் செயலாளராக அஹமது கபீா் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: இஸ்லாமியா்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த தோ்தல் அறிக்கையில் திமுக தரப்பில், இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, இஸ்லாமியா்களின் இட ஒதுக்கீட்டை உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும். பிகாரில், சாா் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 51 லட்சம் போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்தசெயல் திட்டத்தை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.