வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
கொள்ளிடம் ஆற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தல்
கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேட்டூா் அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீா் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 1 லட்சம் கனஅடி வீதம் நீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் 40 ஆயிரம் கனஅடி நீா் திறந்துவிடப்பட்டு படிப்படியாக 1 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட உள்ளது.
எனவே, அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். குழந்தைகளை ஆற்றுப் பகுதியில் விளையாட அனுமதிக்க கூடாது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என தெரிவித்துள்ளாா்.