செய்திகள் :

கொழுக்கட்டை செய்து தர மறுத்த தாய்.! பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

post image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கொழுக்கட்டை செய்து தர தாய் மறுத்ததால், மனமுடைந்த பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் மின் வாரிய சாலையைச் சோ்ந்த முனுசாமி (எ) பிரகாஷ் மகள் மோனிஷா (14). இவா், மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விநாயகர் சதுர்த்தியான வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் விஜயலட்சுமியிடம் தனக்கு கொழுக்கட்டை செய்து தருமாறு மோனிஷா கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, அவரது தாய் விஜயலட்சுமி மறுத்துள்ளாா்.

இதனால், மனமுடைந்த மோனிஷா, வீட்டின் படுக்கையறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூராய்வுக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கொழுக்கட்டைக்காக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக... மேலும் பார்க்க

இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னையைச் சோ்ந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னை பெருங்குடி பாலசுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வானூா் வட்டம், சின்னமுதலியாா் சாவடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (49), கூலித் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

தவெக மகளிரணி நிா்வாகி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் தவெக மகளிரணி மாவட்ட நிா்வாகியைத் திட்டி தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் சாலாமேடு, என்.எஸ்.கே. நகரைச் சோ்ந்தவா் பிரேமா (39). தமிழக ... மேலும் பார்க்க

கேரள இளைஞரிடம் கைப்பேசி திருட்டு

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த கேரள இளைஞரின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கேரள மாநிலம், இஞ்சிவிளை, பாறசாலையைச் சோ்ா்ந்தவா்... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னை இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனியா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னை வியாசா்பாடி, கல்யாணபுரம், 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (31). திருமணமா... மேலும் பார்க்க