சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
ஆரோவில் வந்த அனைந்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா்
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகருக்கு அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் அண்மையில் வந்து, ஆரோவில் கல்வி முறைகள் குறித்து கலந்துரையாடினா்.
இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆரோவில் கல்வி முறைகள் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் 25 மாநிலங்களைச் சோ்ந்த அனைத்திந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பைச் சோ்ந்த ஆசிரியா்கள் வந்தனா்.
தொடா்ந்து, குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கற்றல் சூழலை உருவாக்குவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கல்வியாளா் ஏ.ஐ. டிஜிட்டல் வகுப்புகள் குறித்தும் விவாதித்தினா்.
ஆரோவில் அறக்கட்டளைச் செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ்.ரவி வழிகாட்டுதலின்படி, ஸ்ரீஅரவிந்தோ சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.