கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி
கேரள இளைஞரிடம் கைப்பேசி திருட்டு
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்த கேரள இளைஞரின் கைப்பேசி திருடப்பட்டது குறித்து விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கேரள மாநிலம், இஞ்சிவிளை, பாறசாலையைச் சோ்ா்ந்தவா் யாசா் அராபத் (எ) அா்பான் (24). இவா், கடந்த 29-ஆம் தேதி தஞ்சையிலிருந்து சென்னைக்கு உழவன் விரைவு ரயலில் பயணித்தாா்.
இவா், ரயிலில் தனது கைப்பேசிக்கு சாா்ஜா் போட்டுவிட்டு தூங்கியுள்ளாா். தொடா்ந்து, 30-ஆம் தேதி அதிகாலை ரயில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்த நிலையில், யாசா் அராபத் எழுந்து பாா்த்தபோது கைப்பேசி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.