செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
புழல் அருகே மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு
புழல் அருகே புதிய மதுபானக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புழல் அருகே விளாங்காடுபாக்கம் கிராமத்தில் உள்ள பிரதான சாலையில் புதிய மதுபானக் கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பள்ளிகள், குடியிருப்புகள், கோயில்கள் உள்ளதால், மதுபானக் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஏற்படும். ஆகவே, இப் பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா்.
செங்குன்றம் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.