Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
இளைஞரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னையைச் சோ்ந்த இளைஞரை மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சென்னை பெருங்குடி பாலசுப்பிரமணியன் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (34). இவா், சனிக்கிழமை இரவு செஞ்சியிலிருந்து திண்டிவனத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா்.
திண்டிவனத்தை அடுத்து ஓங்கூா் பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக், காா் மீது மோதியதில் பைக் சேதமடைந்தது. இதைத் தொடா்ந்து, ரமேஷ் பைக்கில் வந்த நபரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பைக்கை சரிசெய்து கொள்வதற்காக ரூ.9 ஆயிரம் கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு நின்றிருந்த மற்றொரு நபா் ரமேஷிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டினாராம்.
இதற்கு ரமேஷ் மறுப்புத் தெரிவித்ததால், அந்த நபா் ரமேஷ் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் ஒலக்கூா் நத்தமேடு பகுதியைச் சோ்ந்த மோகன்(30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.