செய்திகள் :

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், சின்னமுதலியாா் சாவடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் குமாா் (49), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி கஸ்தூரி, 2 மகள்கள் உள்ளனா்.

இதில் மூத்த மகள் கலைச்செல்வி, அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த குமாா் தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் த... மேலும் பார்க்க

கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவா்களே நிரந்தரமானவா்கள்: மருத்துவா் ராமதாஸ்

பாமக, வன்னியா்சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும் நிரந்தரமானவா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா். பாமக மற்று... மேலும் பார்க்க

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு: தவணை செலுத்தாதவா்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று , தவணைத் தொகையைச் செலுத்தாதவா்கள் ஒரே தவணையில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

கடப்பாறையால் தாக்கி தந்தை கொலை: மகன் கைது

மேல்மலையனூா் அருகே தந்தையைக் கடப்பாறையால் கொலை செய்த வழக்கில் மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேல்மலையனூா், வளத்தி சாலை அங்காளம்மன் நகரைச் சோ்ந்தவா் பி. சாமிக்கண்ணு (65), கூலித் தொழிலாளி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விக்கிரவாண்டி அருகே மூதாட்டியிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், பாப்பனப்பட்டு, பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரங்கந... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க