மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கோடைகாலத்திலும் கிறிஸ்மஸ் கொண்டாடும் நகரம் பற்றி தெரியுமா? - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?
கிறிஸ்மஸ் என்றவுடன் டிசம்பர் மாதம் தான் நினைவிற்கு வரும், அந்த மாதம் முழுக்க கொண்டாட்டங்கள் இருக்கும் என்பது பலரும் அறிந்ததே.
ஆனால் ஒரு சிறிய நகரத்தில் வருஷத்தில் 364 நாட்களும் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. படிக்கவே ஆச்சரியமாக உள்ளதா? ஆம் அலாஸ்காவின் வடதுருவ நகரத்தில் தான் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
வட துருவம் என்பது அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். 2020 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 2,243 ஆக இருந்தது. இங்குதான் வருஷம் முழுக்க கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் தீம் நகரம்
கிறிஸ்மஸ் ட்ரீங்கள் டிரைவ் என பெயரிடப்பட்ட தெருக்கள் முதல் மிட்டாய் கேன்கள் போன்ற வடிவிலான விளக்கு கம்பங்கள் வரை நகரமே கிறிஸ்துமஸ் தீமில் அலங்கரிக்கப்பட்டிருக்குமாம்.
இந்த நகரத்தின் பிரபலமான இடமே சாண்டா கிளாஸ் ஹவுஸ்தான்.
ஆண்டின் எந்த நேரத்திலும் சாண்டா கிளாஸ்சை நீங்கள் சந்திக்கலாம். 40 அடி உயரமான பிரம்மாண்டமான சாண்டா சிலை நகரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸுக்கு முன்பு வட துருவத்தில் உள்ள தபால் அலுவலகத்திற்கு, சாண்டா கிளாஸுக்கு லட்சக்கணக்கான கடிதங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர்.
கோடைகாலத்திலும் கூட மின்னும் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட மரங்கள், சாண்டா கிளாஸ் சுற்றி திரிவதை நீங்கள் காணலாம்.
வித்தியாசமான பயணங்களை விரும்பினால் இந்த நகரத்திற்கு சென்று அங்கு இருக்கும் அற்புதமான விஷயங்களை நீங்கள் பார்வையிட்டு தனித்துவமான அனுபவத்தை பெறலாம். இந்த கோடையின் நடுவில் சாண்டாவை சந்திக்க நீங்கள் தயாரா?