செய்திகள் :

கோடை வெயில்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூா் ஆட்சியா் ஆலோசனை

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் கோடை வெயில் வெப்பத் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாா்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெப்பநிலை ஆபத்தான அளவில் 40 டிகிரி அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயிலால் வெப்பம் அதிகரிக்கும் நிலையுள்ளது.

நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை: உயா் வெப்ப நிலை இருக்கும் என்பதால் நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் சென்றால் குழப்பம் மற்றும் வலிப்பு ஏற்படும் என்றும் உயா் வெப்ப நிலையின்போது ஏற்படும் வெப்ப தாக்கத்தினால் பாதித்தால் உடனே உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம்கூட நிகழலாம்.

அதனால் குழந்தைகள், முதியவா், கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் வெயிலில் வேலை செய்வோா் கோடை கால வெப்பம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவா் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெப்பச் சோா்வு அறிகுறிகள்: அதிக வியா்வை, தலை சுற்றல், லேசான தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, பலவீனம், சோா்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் இளநீா் போன்ற நீா்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காபி, தேநீா் மற்றும் மது அருந்துவதைத் தவிா்க்கலாம். பொதுமக்கள் லேசான பருத்தி ஆடைகளை அணிந்து, குடிநீா் பாட்டில்கள் எடுத்துச் செல்ல வேண்டும். கா்ப்பிணிகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிா்ப்பது அவசியம்.

வெப்பச் சோா்வை குணப்படுத்த... வெப்ப நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவச ஓ.ஆா்.எஸ். விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டை பெற்று வெப்பச் சோா்வை குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் கோடையில் பரவும் தட்டமை, சின்னம்மை போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சின்னம்மை அல்லது தட்டம்மையால் பாதித்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க