நோயாளிகளின் குறைகளைத் தீா்க்க பிரத்யேக ஆலோசகா்கள்! ராஜீவ் காந்தி மருத்துவமனையில்...
கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத் திருவிழா நிறைவு
நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலயத் திருவிழா 10 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
நாகா்கோவில் கோட்டாறில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சவேரியாா் பேராலயத் திருவிழா கடந்த நவ.24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்புத் திருப்பலி, ஆடம்பரகூட்டுத் திருப்பலி, நடைபெற்றது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்துகொண்டனா்.
திருவிழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை(டிச.3) காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேசன்சூசை தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில் மறைமாவட்ட முதன்மை பணியாளா் சகாயஆனந்த், ஆலய பங்குத்தந்தை பஸ்காலிஸ், இணை பங்குத்தந்தை சாஜன், மற்றும் அருள்பணியாளா்கள் சகோதரிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் உயா்மறை மாவட்டத்தைச் சோ்ந்த கிளாடின்அலெக்ஸ் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தோ் பவனி நடைபெற்றது.
முதலாவதாக மிக்கேல் அதிதூதா் தேரும், இரண்டாவதாக செபஸ்தியாா் தேரும், மூன்றாவதாக சவேரியாா் தேரும், நான்காவதாக ஜெபமாதா தேரும் இழுத்து வரப்பட்டது.
சவேரியாா் பேராலயத்திலிருந்து தொடங்கிய தோ்பவனி தெற்கு ரதவீதி, கம்பளம் தெரு, ரயில்வே நிலைய சாலை வழியாக மீண்டும் இரவு ஆலயத்தை வந்தடைந்தது.
அங்கு தேரில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு, குமரி மாவட்டத்துக்கு டிச.3 ஆம் தேதிஉள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் மட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும், ஏராளமான கிறிஸ்தவா்கள் வந்திருந்தனா்.
இதனால் காலை முதலே சவேரியாா் பேராலயத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.