ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!
கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா
தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு நவநாள் திருப்பலி நிறைவுபெற்று இரவு 10 மணி அளவில் தோ்பவனி தொடங்கியது. கோனேரிப்பட்டியில் முக்கிய வீதிகளில் தோ்பவனி வந்தது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.