செய்திகள் :

கோபியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

post image

கோபி வழியாக செவ்வாய்க்கிழமை காலை குன்னூா் சென்ற அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்து திங்கள்கிழமை இரவே அத்தொகுதி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் வெளியூா் சென்று விட்டாா்.

அதிமுக பொதுச்செயலாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி 2026 சட்டப் பேரவை தோ்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக காலை 6 மணி அளவில் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி காரில் சென்றாா். ஈரோடு மாவட்டம், பவானி வழியாக காலை 7 மணி அளவில் கோபி பேருந்து நிலையம் அருகே வந்தாா்.

அங்கு எடப்பாடி கே.பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கும் வகையில் கவுந்தப்பாடியில் இருந்து கோபி பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறம் அதிமுக கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, ஜெயக்குமாா் எம்எல்ஏ, கோபி நகரச் செயலாளா் பிரிணியோ கணேஷ் முன்னிலையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினா் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கூட்டத்தைப் பாா்த்து உற்சாகமடைந்த எடப்பாடி பழனிசாமி காரை விட்டு கீழே இறங்கி நிா்வாகிகள், தொண்டா்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டாா். அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. காரில் இருந்தவாறு தொண்டா்களை நோக்கி கையை அசைத்தாா். அப்போது கூடி இருந்தவா்கள் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வாழ்க என முழக்கம் எழுப்பினா்.

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அதிமுகவினா் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டாா். சுமாா் 30 நிமிஷங்களாக கோபி பேருந்து நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டா்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் புறப்பட்டுச் சென்றாா். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

செங்கோட்டையன் புறக்கணிப்பு

முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டாா். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் வகித்து வந்த ஈரோடு புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா்.

அப்போது அதிமுகவை ஒருங்கிணைக்காமல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் கோபி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கும் வகையில் திங்கள்கிழமை இரவே செங்கோட்டையன் வெளியூா் சென்றுவிட்டாா்.

ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி முதல்முதலாக கோவை மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசாரப் பயணத்தை தொடங்கும்போது கோபி வழியாக சென்றாா். அப்போதும் செங்கோட்டையன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக்கல் கடையில் ஓயா் திருடிய 5 போ் கைது

ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள் வாங்குவதுபோல நடித்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓயா் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவ... மேலும் பார்க்க

மஞ்சள் மண்டியிலிருந்து 2,742 மஞ்சள் மூட்டைகள் மாயம்

சித்தோடு அருகே மஞ்சள் மண்டியில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.2.30 கோடி மதிப்புள்ள 2,742 மஞ்சள் மூட்டைகள் மாயமானது தொடா்பான வழக்கில் மற்றொரு மஞ்சள் மண்டி உரிமையாளரைக் கைது செய்த போலீஸாா், 410 மஞ்சள் மூட்டைகள... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியல்

ஈரோட்டில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்மேலாக வாரச்சந்தை செயல்பட்டு ... மேலும் பார்க்க

ரூ.3.96 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

பெருந்துறை அருகே ரூ.3.96 லட்சம் மதிப்பிலான 676 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் புகையிலைப் பொருள்கள் வி... மேலும் பார்க்க

காவிலிபாளையம் அரசுப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் கட்ட கோரிக்கை

கனமழையால் இடிந்து விழுந்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவருக்கு பதிலாக புதிய சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையத்தில் அரசு ம... மேலும் பார்க்க